கொழும்புக்கு பிரவேசிக்கும் வாகனங்களில், ஒரு நாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்று (02) முதல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கம்பஹா, பாணந்துறை, நுகேகொடை, கல்கிசை, வத்தளை போன்ற பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஒரு வாகனத்தை பல தடவைகள் சோதனைக்கு உட்படுத்துவதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஒரு பகுதியில் முழுமையாக சோதனைக்குபட்படுத்தப்படும் வாகனத்தில் ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்படவுள்ளது.
இன்று ஒட்டப்படும் ஸ்டிக்கரானது, இன்று மாத்திரமே செல்லுபடியாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாளைய தினம் வேறொரு ஸ்டிக்கரை ஒட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் தொடர்ச்சியாக சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.