நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் அதனை செய்ய முடிந்த தம்மிடம் ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார இதனைக் கூறியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சேவையில் ஈடுபட்டுள்ள சுகாதார தரப்பினர் முன்வைத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்தால் முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதை விடுத்து அதனை அத்தியாவசிய சேவையான அறித்து சர்வாதிகார போக்கில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.