பமுனுகம, உஸ்வெட்டகொய்யவா பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளிற்கான முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த பௌத்த பிக்கு ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முதியோர் இல்லம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்று என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டு அங்கு தங்கிருந்த 73 வயதுடைய ஜாஎல பகுதியை சேர்ந்த ஒருவரே, பௌத்த பிக்குவின் தலையில் தாக்குதல் நடத்தியுள்ளார்.
நேற்று (19) காலை பிக்கு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
அந்த தங்குமிடத்தில் 18 வயோதிபர்கள் உள்ளனர். முறையான அனுமதி பெற்று அந்த தங்குமிடம் இயங்குகிறதா என்பதையும் பொலிஸார் ஆராய்கின்றனர்.