கண்டியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி நடத்திச் செல்லப்பட்ட மாணவர் தங்குமிட விடுதி ஒன்று சுகாதாரத் துறையினராலும், பொலிஸாரினாலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கண்டி - கட்டுகஸ்தோட்டை - ரணவன வீதிப் பகுதியில் குறித்த மாணவர் தங்குமிட விடுதி இயங்கியுள்ளது.
அந்த விடுதியில் இருந்த மாணவர் ஒருவர், கொரோனா தொற்றுறுதியாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த தங்குமிட விடுதியில் இருந்த 50 மாணவர்களும், 08 நிர்வாக அதிகாரிகளும், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.