ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட இரண்டாவது பட்டியல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு (சி.இ.ஏ) அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் உள்ள பெரும்பான்மையான பிளாஸ்டிக் பொருட்களை சூழல் நட்பு பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்க முடியும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றைப் பயன்படுத்துவதினால் நாடு பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பை சந்திக்க வேண்டியுள்ளது.
இரண்டாவது பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த தயாரிப்புகள் பின்வருமாறு.

- சட்டை பொதிகளில் சட்டை கிளிப்புகள்
- ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் கரண்டி
- ஃபோர்க்ஸ் (Forks)
- கத்திகள்
- உணவு கொள்கலன்கள் (தயிர் / ஐஸ்கிரீம்)
- கரண்டி
- உணவுப் பொதிகள் மற்றும் கோப்பைகள்
- பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் சுவரொட்டிகள்
- விளம்பரங்கள், கட்-அவுட்கள் மற்றும் பல்வேறு வகையான விளம்பரங்கள்
- ஒற்றை-பயன்பாட்டு ஸ்ட்ரோக்கள்
- 400-500 மி.மீ வரையிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சிறிய ஷாப்பிங் பைகள்
- மளிகைப் பைகள், PET இலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள்
- பி.வி.சி சிறிய பாட்டில்கள் 400 மி.மீ இலும் குறைவானவை.
(யாழ் நியூஸ்)