நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 183,028 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது. (இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் அடங்குவர்)
அத்துடன் மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 5 பேர் இதுவரையில் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.