மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவை தொலைபேசியில் அழைத்து, “இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா” ( தென் செப த? - දැන් සැපද) என்று கேட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மொரட்டுவ தடுப்பூசி நடவடிக்கைகளைத் தடுத்ததற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து மேயர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டபோது அந்த நபர் தொலைபேசி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேயர் பொலிஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபருக்கும் மேயருக்கும் இடையில் கடந்த காலங்களில் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஒரு வழக்கு விசாரணைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)