நாடு முழுவதிலும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பதா இல்லையா என்பது பற்றி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இன்று (14) கருத்து வெளியிட்டார்.
அதன்படி இந்த வாரத்தில் வெளியாகின்ற கொரோனா தொற்று பற்றிய அறிக்கைகளை வைத்தே பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பதா அல்லது நிர்ணயிக்கப்பட்ட வரும் 21ஆம் திகதி தளர்த்துவதா என்ற தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் கடந்த மே மாதம் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தத் தொடங்கிய நிலையில் இன்றுவரை 2300 முதல் 2800 வரையான தொற்றாளர்கள் தினமும் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.