எதிர்வரக்கூடிய இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக தெரிவான இலங்கை கிரிக்கட் வீரர்கள் சுற்றுப்பயணத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதிருக்க முடிவு செய்துள்ளனர்.
இதனை வீரர்கள் சார்பாக அவர்களின் வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.
புதிய வீரர்களின் தரவரிசையில் முறைகேடுகள் மற்றும் அதன் வெளிப்படைத்தன்மை தொடர்பான கடுமையான பிரச்சினைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்து சுற்றுப்பயண ஒப்பந்தம் போன்று அடுத்து வரும் சுற்றுப்பயணங்களிலும் கையெழுத்திடாதிருக்க வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.
வீரர்கள் எந்தவித கொடுப்பனவுகள் இன்றி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விளையாட தயாராக இருப்பதாகவும் வழக்கறிஞர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 03 ஆம் திகதி அன்றே இவ்வொப்பந்தங்களில் கையெழுத்திட இருந்ததாகவும், வீரர்கள் மற்றும் இலங்கை கிரிக்கட் வாரியம் இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையிலேயே இவ்வாறு கையெழுத்திடாது பிற்போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.