அமைச்சர் விமல் வீரவன்சவின் கைத்தொழில் அமைச்சின் கீழிருந்த, வரையறுக்கப்பட்ட லங்கா பொஸ்பேற் நிறுவனம் மஹிந்தானந்த அலுத்கமகே இனது விவசாய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் கீழுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அது மாத்திரமன்றி கைத்தொழில் அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சரின் கீழுள்ள நிறுவனங்கள், விடயதானங்களில் மாற்றம் செய்யப்பட்டு குறித்த அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.