மரம் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தென்னை மரங்களை வெட்டுவதை தடைசெய்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே வெளியிட்டுள்ளார்.
அமைச்சரால் வழங்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு எண் 2232/33 இல் தடைசெய்யப்பட்ட மரங்களின் பட்டியலில் தென்னை மரமும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானியின் அடிப்படையில் தென்னை மரங்களை, எதிர்காலத்தில் வெட்டுவதற்கு பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகர் ஆகியோரின் ஒப்புதல் தேவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.