அவ்வாறு அனுமதி கிடைத்த பிறகே குறித்த மருந்தை விளம்பரப்படுத்த முடியும் என்று இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் வஜிர திசாநாயக்க கூறுகிறார்.
இந்த நடைமுறையை பின்பற்றாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இதேவேளை, கொரோனா மருந்துகளை கண்டுபிடித்ததாக விளம்பரம் செய்யும் மருத்துவர்கள் குறித்து president@MC.lk என்ற முகவரிக்கு பொதுமக்கள் முறைப்பாடளிக்க முடியும் என்றும், இது தொடர்பில் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அவர் அறிவித்தார்.