நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று இரவு (04) தெரிவித்துள்ளது.
இந்த மரணங்கள் கடந்த மே 11ஆம் திகதி முதல் ஜூன் மூன்றாம் திகதிவரை நிகழ்ந்துள்ளதுடன் இவ்வாறு உயிரிழந்தவர்களில், 25 ஆண்களும் 23 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 1,656 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதேசமயம் நேற்று 3,410 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 12 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 199,254 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 1,884 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக 164,281 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.