அளுத்கம - தர்கா நகர், புளுகஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
T56 ரக துப்பாக்கியின் 12 ரவைகள் உள்ளிட்டப் பல ஆயுதங்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, இதுத் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளப் பொலிஸார், இந்த விசாரணைகளுக்காக முன்னாள் இராணுவ வீரரின் தகவல்களை இராணுவத்திடமிருந்துப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
-தமிழ் மிர்ரர்