
இதன்படி ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 50 கட்டணம் அறவிடப்படும் என்று அவர் தெரிவித்தார். கொரோனா தொற்றை அடுத்து பாதிக்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், சுமார் 10 ஆண்டுகளாக ஒரு கிலோமீட்டருக்கு 40 முதல் 45 ரூபாய் வரையே வசூலித்து வந்ததாகவும் இம்முறை எரிபொருள் விலை அதிகரிப்பதை இனி தாங்க முடியாது என்றும் அவர் கூறினார்.
முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு தற்போதைய அரசு இதுவரை எந்த சலுகையும் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த கட்டணங்களை அதிகரிப்பதை தவிரவேறு வழியில்லை என்றும் தலைவர் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விலை அதிகரிப்பால், வேறு பல சிக்கல்கள் எழுந்துள்ளன, மேலும் வாகன பாகங்கள் மற்றும் எண்ணெய் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.