அத்தியாவசிய சேவைகளுக்காகப் பயணிக்கும் வாகனங்களை அடையாளம் காண காவல்துறை அறிமுகப்படுத்திய ஸ்டிக்கர் திட்டம் இன்றும் (03) செயற்படுத்தப்படும்.
ஸ்டிக்கர் பொறிமுறை வேறு நிறத்தில் இருப்பதால் நேற்று வழங்கப்பட்ட ஸ்டிக்கர்களை இன்று பயன்படுத்த இயலாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும் ஜூன் 14 வரை பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ள கால கட்டத்தில் இந்த ஸ்டிக்கர் முறைமை தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடுகள் அமுலிலுள்ளதால் கொழும்புக்குள் நுழையும், கொழும்பிலிருந்து வெளியேறும் 52 இடங்களில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான திட்டம் இன்றும் நடைமுறைப் படுத்தப்படுகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் பொது போக்குவரத்து சேவைகள் இக்கால கட்டத்தில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், டெக்ஸி சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.