இலங்கையில் இன்று (31) கொரோனா தொற்றின் விளைவாக 43 பேர் மரணித்துள்ளதாக பதிவாகியுள்ளது.
அதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்று தாக்கத்தினால் மரணித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,484 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு புதிதாக 2,912 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 186,364 ஆக அதிகரித்துள்ளது. இதில் 34,624 சிகிச்சை பெற்று வருகின்றனர்.