மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட 12, 14, வயதுடைய இரு சிறுவர்களை நேற்று (14) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிராமம் ஒன்றில் சம்பவதினமான நேற்று மாலை குறித்த சிறுமியின் தாயார் அருகிலுள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நிலையில், குறித்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்தபோது, அந்த பகுதியைச் சேர்ந்த 12, 14 வயதுடைய இரு சிறுவர்கள் வீட்டினுள் புகுந்து சிறுமியை பாலியல் பலத்காரம் செய்ய முயற்சித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து, சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்ததை தெரிவித்ததையடுத்து அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த இரு சிறுவர்களையும் பொலிசார் கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருதாகவும் தெரிவித்தனர்.
-கனகராசா சரவணன்