கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 55 பேர் நேற்று (17) உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிட்டார்.
32 ஆண்களும், 23 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இது நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை 2,470 ஆக உயர்த்தியுள்ளது.