நாளை முதல் ரூ. 5,000 வழங்கப்படும் - பெறத்தகுதி உடையோர் விபரமும் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் ரூ. 5,000 வழங்கப்படும் - பெறத்தகுதி உடையோர் விபரமும் வெளியானது!

5000 ரூபாய் கொடுப்பனவு நாளை முதல் மீண்டும் வழங்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இன்று (01) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கொரோனா தொற்று மற்றும் பயணக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தை இழந்தவர்களும் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என கூறினார்.

இதேவேளை சமூர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அந்த கொடுப்பனவுகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தகுதியுடையோர் விபரம் பின்வருமாறு,
  1. நிரந்தர வருமானம் பெறும் அரச ஊழியர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகின்ற வர்க்கத்தினரை தவிர ஏனைய அனைத்து குடும்பங்களுக்கும் இது உரித்தாகும். 
  2. சமுர்த்தி பெறும் குடும்பங்கள். 
  3. சமுர்த்திபெற தகுதியிருந்தும் இதுவரை சமுர்த்தி உணவு முத்திரை கிடைக்காது காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள். 
  4. 70 வயதைக் கடந்த முதியவர்கள். 
  5. 70 வயது பூர்த்தியடைந்தும் இதுவரை மூத்தோர் கொடுப்பனவுக்கான முத்திரையைப் பெறாது காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள். 
  6. மாற்றுத் திறனாளிகள். 
  7. இதுவரை கொடுப்பனவைப் பெறாது காத்திருப்பு பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகள். 
  8. PMA (மஞ்சள் நிற அட்டை) பெறுகின்றவர்களும் மற்றும் அதற்கு விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களும். 
  9. சிறுநீரக பாதிப்பு போன்ற பாரிய நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுருப்போர். 
  10. ஒருவர் சமுர்த்தி பெறுகின்றவர் அல்லது சமுர்த்தி பெற தகுதியுடையவர், அத்துடன் அவர் மூத்தோர் கொடுப்பனலைப் பெறுகின்றவர், அல்லது அதனை பெற தகுதியுடையவராயின் - அவர் மேற்படி இரண்டு வகைக்குட்பட்ட கொடுப்பனவுகளையும் (5000 + 5000 = 10,000/=) பெறுவதற்கு தகுதி உடையவராவர்.
  11. இந்த உதவி தொகையை பெற தகுதியுடையோர் எவர் என்ற முழுமையான தகவல்களை மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில், கிராம சேவகர்களூடாக மக்கள் பெற முடியும்.
இந்த சேவையை ஒருங்கிணைப்பதற்காக ஜனாதிபதி செயலகம் 24 மணி நேரமும் பொது மக்களுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே, இந்த சேவைக்கு பொறுப்பான அதிகாரிகளை பிரதேச செயலக மட்டங்களில் தொடர்பு கொண்டு இந்த கொடுப்பனவை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.