அதற்கமைய பிரதமரும் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரால் சமுர்த்தி, வதிவிடப் பொருளாதாரம், நுண்நிதிய, சுயதொழில் மற்றும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு இச்செயற்றிட்டத்தை முன்னெடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கிராம அலுவலர்களிடமிருந்து இந்துக் குருமார்கள் தங்களது இந்துக்குருமார் அடையாள அட்டையை அல்லது ஆலய அறங்காவலரிடம் குருமார் என உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்தைக் காண்பித்து 5,௦௦௦ ரூபா உதவித் தொகையைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே வருமானம் இழந்த இந்துக் குருமார்கள் உரிய கிராம உத்தியோகத்தரை தொடர்புகொண்டு உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான பிரதமரின் இந்துமத அலுவல்களுக்கான இணைப்புச் செயலார் சிவ ஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.