தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை 21 ஆம் திகதி நீக்க வேண்டாம் என்று கோரி இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில், "இந்த நிர்கதியான தருணத்தில், தற்போதைய பயணக்கட்டுப்பாடு நடவடிக்கைகளை தடையின்றி மேலும் தொடர வேண்டும் என நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
சில நாட்களுக்கு பயணத்தடையை நீக்குவதன் மூலம், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் நிலவியது போன்று பெரிய தொற்றுநோய்க்கு நம்மை மீண்டும் அழைத்துச் செல்லும். கடந்த மூன்று வாரங்கள் மூடப்பட்டதன் விளைவாக கிடைத்த பலன்களை தியாகம் செய்ய வேண்டி நேரிடும், மேலும் தற்போதைய கட்டுப்பாடான நிலைக்கு மீண்டும் நம்மைத் திருப்பி கொண்டுவர, அதிக நேரம் மற்றும் முயற்சி தேவைப்படும்." என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)