கடுமையான நிபந்தனைகளுடனேயே பயணத்தடை நீக்கப்பட வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.
கொவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை நகைப்பிற்குரியதாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயணத்தடை அமுலில் ஏற்பட்டுள்ள தோல்விக்கு அதிகாரிகள் பொறுப்பு சொல்ல வேண்டுமெனவும், பல்வேறு சுற்று நிருபங்கள் மூலம் பல்வேறு தரப்பினரும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21ம் திகதி பயணத்தடை நீக்கப்பட்டாலும் கடுமையான சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். இந்த பயணத்தடை மற்றும் முடக்க முறைமை பயனற்றதாக மாறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களை மட்டும் குறை சொல்ல முடியாது எனவும், அதிகாரிகள் பயணத்தடை முறையில் பல்வேறு துளைகள் காணப்படுவதாகவும் அதனையே மக்கள் பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.