நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை 21 ஆம் திகதி நீக்குவதா இல்லையா என்பது குறித்து 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொவிட் நிலைமை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கொவிட் பரவல் காரணமாக முழு உலகமும் ஸ்திரமான தீர்மானங்களை எடுக்க முடியாத நிலையிலேயே உள்ளன. இலங்கையிலும் அதே நிலைமையே ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் நாம் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடிய சூழல் நாட்டில் ஏற்பட வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றோம்.
எனினும், இவ்விடயம் தொடர்பில் உடனுக்குடன் தீர்மானிக்க முடியாது. அதற்கமைய நாட்டில் தற்போது காணப்படும் கொவிட் நிலைமை தொடர்பில் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் ஆராய்ந்து போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்த தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் .
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு சற்று முன்னர் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இணையவழியூடாக நடைபெற்ற போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.