இன்று (03) அபுதாபியில் நடைபெற்ற மெகா 15 மில்லியன் பிக் டிக்கெட் ஜாக்பாட் டிராவில், 213288 டிக்கெட் எண்ணைக் கொண்டிருந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையரான ரசிக ஜே.டி.எஸ் வென்றுள்ளார்.
அவர் தனது டிக்கெட்டை கடந்த மே 29ஆம் திகதி அன்று கொள்வனவு செய்திருந்தார். மேலும் அவர் அந்த பரிசு தொகையை இன்னும் 08 பேருடன் பகிர்ந்து கொள்வார்.
ரசிக துபாயில் சிவில் இன்ஜினியராக பணிபுரிகிறார்.
அதிலும் விசேட அம்சம் என்னவென்றால் அவர் வென்ற டிக்கெட்டை கடந்த மாத பிக் டிக்கெட் சீட்டிழுப்பில் 12 மில்லியன் திர்ஹங்களை வென்றெடுத்த இலங்கையை சேர்ந்த மொஹமட் மிஷ்பாக் என்பவரே தெரிவு செய்துள்ளார்.
இன்று அங்குள்ள செய்திச் சேவையுடன் பேசும்போது, எனக்கு சந்தோசத்தை அடக்க முடியவில்லை, எனது வாழ்க்கை மாறுகிறது," என்று ரசிக தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)
வீடியோ: 52 ஆவது நிமிடம் முதல் பார்க்கவும்.