கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படவில்லை என்றாலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மருத்துவ சங்கங்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கையை தொடர்ந்து எதிர்வரும் 21ம் திகதி வரை பயணத்தடை மேலும் ஒரு வாரம் நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் 10 திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.