கொழும்பு - பொரள்ளை பகுதியில் இரு குடும்பத்தினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் எட்டு பேர் காயமடைந்துள்ள நிலையில், இருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இரு குடும்பங்களின் கணவன்மார்களும் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரை மேற்கோள் காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
"ஒரு பெண் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆண் ஒருவருக்கு குறுஞ் செய்தி ஒன்று (கோஹோமத சுது) அனுப்பியுள்ளார். இது குறித்து அறிந்துகொண்ட கணவர் (35 வயது) அந்த குறுஞ் செய்தி யாருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் கண்டுப்பிடித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அந்த பெண்ணிடம் கேட்ட போது அந்த குறுஞ் செய்தி தவறுதலாக அனுப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், குறுஞ் செய்தி அனுப்பப்பட்ட அயல் வீட்டுக்காரருடன் (25 வயது) இது தொடர்பில் விசாரித்துள்ளதுடன், பின்னர் இந்த விவகாரம் மோதலாக மாறியுள்ளது.
இதனால் ஏற்பட்ட மோதலில் 08 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.