ISIS தீவிரவாத அமைப்பின் இராணுவப்பிரிவு தலைவர் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பாசிம் எனும் பெயரினால் அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த நபர், போலி கடவுச்சீட்டின் மூலம் பயணித்துள்ளதாக துருக்கிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிரியாவில் இருந்து ISIS அமைப்பு 2017 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட பின்னர், குறித்த நபர் தலைமறைவாகியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ISIS அமைப்பின் முன்னாள் தலைவர் அபுபக்கர் அல்- பாக்தாதியின் நெருங்கிய உதவியாளராகவும் குறித்த நபர் செயற்பட்டுள்ளதாக, துருக்கிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.