ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் இடத்தை நிரப்ப கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பரிந்துரைத்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுடன் ஆலோசித்த பின்னர் கட்சி இப்போது இந்த விடயத்தில் இறுதி முடிவை எடுக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக பல ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்தவர்களும் ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்று முன்மொழிந்தனர்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அவமானகரமான இழப்பை சந்தித்தது மட்டுமன்றி பாராளுமன்றத்தில் ஆசனங்களை பெறவும் தவறிவிட்டது.
எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த வாக்கெடுப்பில் பெறப்பட்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசிய பட்டியல் இடத்தைப் பெற ஐக்கிய தேசியக் கட்சியினால் முடிந்தது.
தேசிய பட்டியல் இடத்தை நிரப்ப ரணில் விக்ரமசிங்கவை பரிந்துரைக்கும் முடிவில் ஐக்கிய தேசியக் கட்சி ஒருமனதாக உள்ளதாக கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார் .
காலியாக உள்ள இந்த இடத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தனவே நிரப்புவார் என்ற ஊகம் முன்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)