பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இன்று -04- நாடாளுமன்றுக்கு அழைத்து வரப்படாமை தொடர்பில் ஆராய்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தால், அவர் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, நாடாளுமன்ற படைக்கல சேவிதர், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அறியப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், இன்று முற்பகல் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில், ரிஷாத் பதியுதீன் விவகாரம் தொடர்பில் ,எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.