பயணக் கட்டுப்பாடுகளை மீறி, அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்று இங்கினியாகலை, நாமல்ஓயாவில் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு (30) அக்கரைப்பற்றிலிருந்து சென்ற குறித்த தனியார் பஸ் 11.00 மணியளவில், இவ்வாறு பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த பஸ்ஸில் பயணித்த சாரதி, நடத்துனர் உள்ளிட்ட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அனைவரையும் இன்று (31) அம்பாறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல், பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வகையிலும் பொதுப் போக்குவரத்து சேவைகளையும் முன்னெடுக்க முடியாத நிலையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த பஸ் தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் இங்கினியாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.