நாட்டு மக்கள் கொரொனா சுகாதார வழிக்காட்டல்களை உரிய முறையில் மக்கள் பின்பற்ற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செயற்படவில்லை என்றால் எதிர்வரும் நாள்களில் நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 ஆயிரமாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.
தற்போது அடையாளம் காணப்படும் நபர் ஒருவரினால் மேலும் 4 பேருக்கு வைரஸ் பரப்பினால், அல்லது மக்கள் வைரஸ் குறித்து அவதானமின்றி செயற்பாட்டால் இந்த இலக்கை எட்ட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு நாட்டினுள் இன்னமும் வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் எதிர்வரும் 2 வாரங்களில் அந்த நிலைமை கை நழுவி போய்விடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தியாவசிய விடயங்களை தவிர்த்து வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டாம். முகக் கவசத்தை உரிய முறையில் அணியுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.