
இன்று (20) அதிகாலை பசறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த 33 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில், ஐந்து குழந்தைகள் உட்பட 33 பேர் பசறை மற்றும் பதுளை வைத்தியாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விபத்தில் 09 ஆண்களும், 06 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் லுணுகலை பகுதியில் வசிக்கும் 53 வயதான பஸ்ஸின் சாரதி உயிரிழந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர் தற்போது கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், வழமையான சாரதி குறித்த பஸ்ஸினை செலுத்தவில்லை எனவும், இந்த பஸ்ஸினை செலுத்த வேண்டிய சாரதிக்கு பதிலாக மற்றுமொருவர் இந்த பஸ்ஸினை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.'
இந்நிலையில், விபத்து இடம்பெறும் போது பஸ்ஸிற்கு எதிரே பயணித்த பாரவூர்தியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், சாரதியை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.