கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றினால் ஏற்பட்ட இதய செயலிழப்பே அவரது மரணத்திற்கான காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வீரம் பொருந்திய தலைவரை தன்ஸானியா இழந்திருப்பதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டின் உப ஜனாதிபதி ஹசன், 14 நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் எனவும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
அந்நாட்டு அரசியலமைப்பின்படி தன்ஸானியாவின் 5 ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஜோன் மகுபுலியின் எஞ்சிய பதவிக்காலம் நிறைவு செய்யப்படும் வரை அந்நாட்டின் தற்போதைய உப ஜனாதிபதி ஹசன் ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த ஜனாதிபதி ஜோன் மகுபுலி கடந்த மாதம் 27 ஆம் திகதி மக்கள் மத்தியில் இறுதியாக தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானதைத் தொடர்ந்து அவர் கென்யாவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் டுண்டு லிஸ்ஸு தெரிவித்துள்ளார்.