
மொனராகலை- பதுளை வீதியின் பஸறை 13 ஆம் தூண் பிரதேசத்தில் பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
லுணுகலவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் மேலும் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இன்று (20) காலை 7.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பில பஸறை பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.








