
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது.
மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும், பொல்கஸ்ஓவிட பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் ஆடிகம பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
