
மாவனெல்லையில் புத்தர் சிலை
சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துடன் அசாத் சாலியும் தொடர்புபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (17) ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அசாத் சாலிக்கு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஷரீஆ சட்டம் மற்றும் அரச சட்டம் பற்றிய அசாத் சாலியின் சமீபத்திய அறிக்கைகள் தீவிரவாதத்தைத் தூண்டக்கூடும் மற்றும் பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அசாத் சாலியை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் அவரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.