
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளான நிலையில் நாட்டுக்கு அழைத்துவரப்படும் தொழிலாளர்கள் தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்பட அனுமதி வழங்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் ஊழலின் காரணமாக அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களே பயனடைந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், இவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சராசரி இலங்கையர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதற்கு பணம் கோரப்படும் நிலையில், உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட அனுமதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் தவறுமாயின் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்