![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz1gBkMDAfYQBBdokiWYe9jA-xTb45-4oYoUiOLwyjbU08f0Xr8iMiTiYekZv4GZ0p9aVXdzr5bM8KVlAV7h8OFJT2KkwDHwQssqCmiZGrb39AaAQEpGROEUgLXY0WE-FGJ1bJk-fxfeM/s16000/99a14d6a-aa2966c1-17f3cf97-a9b15333-fea7cf67-100e1cba-azath-salley_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped.webp)
நேற்று (16) மாலை சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் வண்டியில் இருந்து துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரை நேற்று கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைதுசெய்த பின்னர் அவரின் வண்டியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே வெளிநாட்டு பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று றவைகலுடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.