
கொரொனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்த நிலையில் இருந்த பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுகயீனம் காரணமாக குறித்த மாணவர் கண்டி - மெனிக்ஹின்ன வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த மாணவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கவில்லை என சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, மொரவக்க மற்றும் தெனியாய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மேலும் 30க்கும் அதிகமான கொரொனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (16) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக பிரதேசத்தின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கமைய மொரவக்க சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இனங்காணப்பட்ட கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.
மூலம் - மடவளை நியூஸ்