
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று (17) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான சேகு இஸ்மாயில் சப்ராஸ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆற்றில் தொழில் செய்யும் குறித்த நபர் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் தொழில் நிமித்தம் சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. இந்நிலயில் உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.