
நீர்விநியோக வடிகாலமைப்பு அமைச்சில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டின் போது அமைச்சா் வாசுதேவ நானயக்கார அவா்களிடம் ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சா் பதில் அளித்தாா்.
கேள்வி: அமைச்சர் அவா்களே இந்த நாட்டில் ஒரு மனிதனுக்கு பேசுவதற்கு பேச்சு சுதந்திரம் இல்லையா freedom of speech right?
பதில்: ஏன் இல்லாமல் உள்ளது. ஆனால் இன, மத குந்தகங்கள் விளைவிக்கும் பேச்சுக்களை பேசினால் சட்டநடவடிக்கை எடுப்பாா்கள், அசாத் சாலி வேறு ஒரு இஸ்லாமிய சட்டத்தின் கீழ் வாழ்வதாக பௌத்த நாட்டில் இருந்து கொண்டு பேசினாா்.
கேள்வி: அப்படியானால் காடு அழிப்பது பற்றி சிரச தொலைக்காட்சியில் இலட்சாதிபதி நிகழ்ச்சியில் பேசிய மாணவியை பொலிஸாா் அவா் வீடு தேடி விசாரனை செய்கின்றாா்களே, இது எந்த வகையில் கூடும். காடு அழிப்பவா்களைத் தேடித்தானே பொலிஸாா் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
பதில்: அது பிழை அவா்கள் காடு அழிப்பவா்களைத்தான் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இந்த மாணவி நாட்டுப்பற்றுள்ள வன வள சூற்றாடல் பற்றுதல் கொண்டவா் இம்மாணவியை பொலிஸாா் விசாரிப்பது பிழை என்பேன்.
கேள்வி: இலங்கையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தடை என்றால் மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக துபாய், குவைத் சவுதி நாடுகளில் இருந்து குடும்பம் குடும்பமாக நுவரெலியா போன்ற பிரதேசங்களில் அரபுப் பெண்கள் முகமூடி அணிந்து தானே உல்லாசப் பிரயாணிகளாக இலங்கை விமான நிலையத்தில் வருவாா்கள் அவா்கள் இனி வரமாட்டாா்கள் இதனால் உல்லாசத்துறையில் மத்திய கிழக்கு நாடுகள் வருமானம் பாதிக்கப்படுமே? ஏன் இம்ரான் கானின் மனைவி கூட முகமூடிதானே அணிந்துள்ளாா்கள்.
$ads={1}
பதில்: ஆனால் ஈரான் நாட்டில் எமது நாட்டுப் பெண்கள் அரைச் சட்டை அணிந்து அந்த நாட்டுக்குள் செல்ல முடியுமா? அவா்கள் சட்டம் போன்றுதான் எமது பௌத்த நாட்டிலும் சட்டம் எதிா்காலத்தில் இருக்கும்.
-அஷ்ரப் ஏ சமத்