
ஷரீஆ சட்டம் தவறான அறிவிப்பு மட்டுமல்ல பயங்கரமானது. இந்த நாட்டில் தனியார் சட்டங்கள் இருந்தாலும் அவை நாட்டின் பொது சட்டத்துக்கு கட்டுப்பட்டவை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் தனியார் சட்டங்கள் இருந்தாலும் அவை நாட்டின் பொது சட்டத்துக்கு கட்டுப்பட்டவை.
எனவே, நாட்டின் சட்டத்தை ஏற்கமுடியாது எனக் கூறுவது சட்டவிரோதமாகும். அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
$ads={1}
புர்காவைத் தடை செய்வது சட்டவிரோதம் எனச் சிலர் கூறுகின்றனர். அவ்வாறு அல்ல. பிரான்ஸில் கூட பொது வெளியில் புர்கா அணிய முடியாது.
புர்காவைத் தடை செய்வதற்கு புதிய சட்டம் இயற்றுமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் உள்ளது என கூறியுள்ளார்.