பௌத்த விஹாரதிபதி ஒருவரிடம் இலஞ்சம் பெறுவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்கள், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேநபர்கள் பலப்பிட்டிய நீதவான் சரித ஜயம்பதி முன்னிலையில் இன்று (21) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேநபர்கள், மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் பெயரைப் பயன்படுத்தி, கடந்த 17ஆம் திகதி பலப்பிட்டிய – யோகாஷ்ரம விகாராதிபதியிடம் 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரியுள்ளனர்.
இதனையடுத்து, இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.