கொரோனா வைரஸ் தொற்றுநோய் நிலை காரணமாக, நாட்டில் இரத்த தான முகாம்கள் ஒழுங்கு செய்யப்படுவது குறைவடைந்துள்ளதால் தேசிய இரத்த வங்கியில் அதன் இரத்த சேமிப்பு குறைவடைந்துள்ளதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது.
சுமார் 90% ஆன குருதி, இரத்த தான முகாம்கள் மூலமாகவே பெறப்படுவதாக அது சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலை மேலும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முன் கொடையாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாக, தேசிய இரத்த வங்கி அறிவித்துள்ளது.
இது, இரத்த மாற்றம் மிக அவசியமாகவுள்ள, வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடும் நம் சொந்த சகோதர சகோதரிகளுக்காக, இரத்த தானம் செய்யத் தயாராக உள்ள அனைவருக்கும் விடுக்கும் ஒரு அழைப்பாகும்.
இரத்த தானம் வழங்க முன்வருபவர்களின் ஆரோக்கியம் இவை அனைத்திலும் பார்க்க மிக முக்கியமானது என்பதோடு, நடைமுறையில் உள்ள கொரோனா தொற்று நோயைக் கருத்தில் கொண்டு, கூட்டம் திரண்டு இரத்தத்தை வழங்குவதைத் தடுக்கும் வகையில், நேரமொன்றை ஒதுக்கும் முறையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, 0115332153 ஐ அழைப்பதன் மூலமோ அல்லது http://nbts.life இணையத்தளத்தின் மூலமோ நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுமாறு தேசிய இரத்த மாற்றீட்டு சேவை கோரிக்கை விடுத்துள்ளது.
ஆயினும் பின்வரும் விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அவதானம்:
பதில் 'ஆம்' எனில், இந்த நேரத்தில் நீங்கள் இரத்த தானம் செய்வது உக்ந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- கடந்த மாதத்தில் நீங்கள் காய்ச்சல், இருமல் அல்லது மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?
- காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ள ஒருவர் இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் வசிக்கிறாரா?
- கடந்த ஒரு மாதத்தில் யாராவது வெளிநாடு சென்றிருக்கிறார்களா?
- கடந்த ஒரு மாதமாக வெளிநாட்டில் இருந்த ஒருவருடன் உங்களுக்கு நெருங்கிய சந்திப்பு ஏற்பட்டதா?
- கடந்த மூன்று மாதங்களுக்குள் நீங்கள் வெளிநாடு சென்று வந்துள்ளீர்களா?