மிக நீண்ட காலமாக சர்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் உள்ள தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல், நீதிமன்ற உத்தரவைப் பெற்ற நிலையில், தம்புள்ளை மாநகர சபை குறித்த பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் மேற்கொண்டுள்ளது.
குறித்த தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகத்திற்கான அனுமதியை ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், அது தொடர்பான ஆவணங்களை 24.02.2021 க்கு முன்னர் தம்புள்ளை மாநகர சபை பொறியியலாளரிடம் சமர்ப்பிக்குமாறு குறித்த தம்புள்ளை பள்ளிவாயலில், மாநகர சபையினால் கடந்த 24ஆம் திகதி ஒட்டப்பட்டதாக பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர் சலீம்தீன் தெரிவித்தார்.
-நிர்வாக சபை உறுப்பினர் சலீம்தீன்