கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதை அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் வரவேற்றுள்ளதோடு, நீண்ட கால தாமதத்தின் பின்னரான தீர்மானம் என்பதையும் ஒரு ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு மேலும் துன்பம் கொடுப்பதைத் தவிர்த்து, அடக்கம் செய்யும் நடவடிக்கையை காலதாமதமின்றி செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.