ஜெனீவாவில், முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே, அரசாங்கம் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவிக்கின்றார்.
வடக்கு கிழக்கு சிவில் சமூக பிரதிநிகள், மதகுருமார்கள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, வவுனியாவில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தன.
இதன்படி, ஜெனீவா விவகாரம் மற்றும் தமிழ் தேசிய பேரவையின் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.