வெலிபன்ன பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது வீட்டின் பின்புறமாக அமைந்திருக்கும் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது மரம் ஒன்று அவர் மேல் விழுந்து பலத்த காயங்களுடன் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு குறித்த மரத்தினை பாதுகாப்பற்ற முறையில் வெட்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் வாடக்காக வசித்து வந்த 52 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு பலியானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
வெட்டிக்கொண்டிருந்த மரத்தின் கயிற்றின் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினாலேயே குறித்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், பாதிப்படைந்த பெண்ணை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல தாமதம் ஏற்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
வெலிபன்ன பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.