குருநாகல் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதனிடையே, வெளிநாடுகளுக்கு நாட்டின் ஒரு பகுதியை வழங்குவதாக வாக்குறுதியளித்து கடன்களைப் பெற்றுக்கொண்ட நிலையில், வழங்கிய வாக்குறுதியை மீறி செயற்படும் போலியான அரசாங்கமே தற்போது உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இவ்வாறு வெளிநாடுகளுக்கு நாட்டை பகுதி பகுதியாக விற்பனை செய்வதன் மூலம் நாட்டில் எதுவும் எஞ்சியிருக்கப்போவதில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், தற்போதைய தலைவர்கள் நாட்டை மூன்று நான்கு பகுதிகளாக உடைத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும், தற்போதைய அரசாங்கம் எதிர்கால சந்ததிக்கான நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்